இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா பகுதியில் இருந்து 8 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியா ஒரு காலத்தில் ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆனால் ஆசிய சிறுத்தைகள் இனம் கடந்த 1952-ம் ஆண்டு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சிறுத்தை இனத்தின் வெவ்வேறு இனங்களான ஆப்பிரிக்க சிறுத்தைகளை சோதனையின் அடிப்படையில் இந்தியாவுக்கு கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதன் காரணமாக இந்தியாவில் மீண்டும் ஆப்பிரிக்க சிறுத்தை இனங்களை அறிமுகப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தான் தற்போது 3 பெண் குட்டி சிறுத்தைகள் மற்றும் 5 ஆண் குட்டி சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்படும். இந்த சிறுத்தை இனங்களை பிரதமர் நரேந்திர மோடி கூண்டுகளில் விடுவிப்பார். மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு சிறுத்தைகள் வனப்பகுதிகளுக்குள் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.