Categories
தேசிய செய்திகள்

ஆப்பிளின் புதிய LockDown Mode…. இது எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சிகோங்க….!!!

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட் ஃபோன்கள், ஐபேட்கள் ஆகிவற்றை பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாக்டவுன் மோட் ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். இது ஐபோன் பயனாளர்களுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்டோன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிளுக்கு ஃபோனில் புதிய பாதுகாப்பு அடுக்கு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் ISO 16 வெர்ஷனில் கிடைக்கிறது.

இந்த லாக்டவுன் மோட் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீரோ கிளினிக் ஹேக்கிங் நுட்பங்களிலிருந்து பாதுகாக்க இந்த புதிய அம்ச அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பைவேர் நிறுவனங்களும் அவசரகாலத்தில் பாதுகாப்பை உடைக்க பல்வேறு மென்பொருளை உருவாக்கி வருகின்றன. ஒரு பாதுகாப்பு ஆய்வாளர் அதில் ஏதேனும் பிழைகளை கண்டறிந்தால் அவருக்கு ரூ.15 கோடி வெகுமதியாக வழங்கப்படும். இது Apple Security Bounty திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் லாக்டவுன் மோட் இல் பாதுகாப்பு அம்சங்களை பார்ப்போம்.

  • செய்திகள்: படங்கள் தவிர மற்ற பெரும்பாலான செய்தி இணைப்பு வகைகள் தடுக்கப்பட்டுள்ளன. இணைப்பு மாதிரிக்காட்சிகள் போன்ற சில அம்சங்கள் முடக்கப்பட்டுள்ளன.
  • இணைய உலாவல்: லாக்டவுன் பயன்முறையிலிருந்து நம்பகமான தளத்தை பயனர் விலக்காத வரை, ஜஸ்ட்-இன்-டைம் (JIT) JavaScript தொகுப்பு போன்ற சில சிக்கலான வலைத் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்.
  • Apple சேவைகள்: பயனர் இதற்கு முன் அழைப்பு அல்லது கோரிக்கையை அனுப்பவில்லை என்றால், FaceTime அழைப்புகள் உள்பட உள்வரும் அழைப்புகள் மற்றும் சேவை கோரிக்கைகள் தடுக்கப்படும்.
  • ஐபோன் பூட்டப்பட்டிருக்கும் போது கணினி அல்லது துணைக்கருவியுடன் வயர் வழியிலான இணைப்புகளைத் தடுக்கப்படும்.
  • லாக்டவுன் பயன்முறை இயக்கப்பட்டிருக்கும் போது, உள்ளமைவு சுயவிவரங்களை நிறுவ முடியாது.

Categories

Tech |