இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதற்கு மாற்றாக இங்கிலாந்தில் ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் நிம் ஜேம்ஸ்.
இவர் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிற்கு ஆப்பிள் பழங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பார்சலை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்ததள்ளது. ஏனென்றால் ஆப்பிள் பழங்களுடன் அவருக்கு புதிய ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.