Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபேட் விளையாட்டால் இத்தனை லட்சம் இழப்பா? அதிர்ச்சியை கொடுத்த 6 வயது சிறுவன் …..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி தாயின் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபாயை அசால்ட்டாக செலவிட்டதால் அதிர்ச்சியடைந்த தாய்.

வில்டனைச் சேர்ந்த ஜெசிகா என்பவர் தனது கணக்கில் இருந்து கடந்த 6 மாதங்களாக ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் புகார் தெரிவித்தபோது, அவரது 6 வயது மகனான ஜார்ஜ், ஐ பேடில் உள்ள சோனிக் போர்சஸ் என்ற கேமை விளையாடியதும், அதில் வழங்கப்படும் காயின்ஸை பெறுவதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை செலவிட்டதும் தெரியவந்தது.

எந்தவொரு அலெர்ட் அமைப்புகளையும் தனது கணக்கில் வைக்கவில்லை என்று அந்தப் பெண் ஒப்புக்கொண்டார், ஏனென்றால் அவற்றைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் அவ்வாறு தெரிந்திருந்தால், எனது 6 வயது குழந்தையை விர்ச்சுவல் தங்க காயின்ஸை பெற கட்டணமாக கிட்டத்தட்ட $ 20,000 வரை செலுத்த நான் அனுமதித்திருக்க மாட்டேன் என்று கூறியள்ளார். 

இதனிடையே, சிறுவன்  ஜார்ஜ் “சரி, அம்மா கவலை வேண்டாம் நான் எனது கயின்ஸை வைத்து உங்களுக்கு திருப்பித் தருகிறேன்” என்று கூறுவதாக கூறியுள்ளார். இந்த விளையாட்டுகள் கொள்ளையடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் மற்றும் சம்மந்தப்பட்ட விளையாட்டு வடிவமைப்பாளர்களை ஜெசிகா குற்றம் சாட்டியுள்ளார். 

இது மட்டுமல்ல  இது போன்ற ஏராளமான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது, எனவே குழந்தைகள் நம்மை தொல்லை செய்யக்கூடாது என அவர்களில் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுக்கும் பெற்றோர்களே உஷார்!!

Categories

Tech |