Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்… உயிருக்கு போராடும் சோகம்…!!!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் ஐ-போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக செல் போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவது மற்றும் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமான ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான புதிய மாடலை போனை வாங்குவதற்கு சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய சம்பவம் அப்போது பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. ஐபோன் வாங்குவதற்காக ஒரு கிட்னியை விற்று விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு கிட்னியும் பாதிக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |