ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக டிம் குக் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை கடந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 125 மில்லியன் டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை டிம் குக் தன்வசம் வைத்திருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது உலகில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி அழகான ‘சவுதி அரம்கோ’ நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட பலமடங்கு உயர்ந்துள்ளது.
அதே சமயத்தில் சர்வதேச அளவில் இரண்டு மில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை கொண்டுள்ள முதல் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் 10.47 விழுக்காடு வரை உயர்ந்திருக்கின்றன. அதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரின் மொத்த சொத்து மதிப்பு உயர்ந்து, தற்போது முதன்முறையாக 100 கோடி டாலர்களை கடந்திருக்கிறது. இருந்தாலும் மற்ற டேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும் போது, டிம் குக்கின் சொத்து மதிப்பு குறைவுதான். அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்களாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலர்களாகவும் இருக்கின்றன. அதேபோல பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.