உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். பின்னர் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்படும்.
இதனை பெறுவதற்கு மாதந்தோறும் பயனர்கள் 1600 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த செய்தியை ட்விட்டர் பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ப்ளூ டிக் வழங்கப்பட்ட பிறகு 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் பயனர்களின் ப்ளூ டிக் மீண்டும் பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆப்பிள் பயனர்களுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு இன்று முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கு மாதம் 8 டாலர்கள் என்றால், ஆப்பிள் பயனர்களுக்கு 11 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த ப்ளூடிக் சந்தாதாரர்கள். தங்கள் ட்வீட்களை எடிட் செய்ய முடியும் என்றும், 1080 பிக்ஸலில் வீடியோக்களை பதிவேற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.