Categories
உலக செய்திகள்

ஆப்பிள் போன் ஆர்டர் பண்ணுனா…. ஆப்பிள் ஜூஸ் வருது…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த லியு என்பவர் ஆப்பிள் ஐபோன் இணையதளத்தில் ரூ. 1,10,142 மதிப்பிலான ஐபோன் ஆர்டர் செய்து அதற்கான தொகையையும் ஆன்லைனில்  செலுத்தி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆப்பிள் இணையதளம் லியு  ஆர்டர் செய்த ஐபோனை டெலிவரி செய்துள்ளது. அந்த டெலிவரி பாக்சை லியு ஆசையுடன் திறந்து பார்த்தபோது அதில் ஐபோனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து வீடியோ எடுத்து அதனை சீன சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் எப்படி வந்தது? என்பது குறித்து ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |