Categories
பல்சுவை

“ஆப்பிள் போன்” பத்திரிக்கையாளரின் கேள்வி…. ரத்தன் டாட்டாவின் ஆச்சரிய பதில்…!!!

கடந்த 2007-ம் ஆண்டு ஆப்பிள் போன் லாஞ்சுக்கு உலகில் உள்ள பணக்காரர்களையும் அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் போது ஒரு பத்திரிக்கையாளர் அங்கிருந்த பணக்காரர்களிடம் ஒரு ஆப்பிளை வாங்குவதற்கு உங்களுக்கு சம்பள அடிப்படையில் எவ்வளவு நாள் ஆகும் என கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு அங்கிருந்தவர்கள் 1 நாள், 2 நாள் என கூறினர். இதனையடுத்து அந்த பத்திரிக்கையாளர் ரத்தன் டாடாவிடம் உங்களுக்கு 1 ஆப்பிளை வாங்குவதற்கு சம்பள அடிப்படையில் எவ்வளவு நாளாகும் என கேட்டார். அதற்கு ரத்தன் டாட்டா 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து மறுபடியும் அந்த பத்திரிக்கையாளர் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, 1 ஆப்பிளை வாங்குவதற்கு எதற்காக இவ்வளவு வருடம் ஆகும் என கூறுகிறீர்கள் என கேட்டார். அதற்கு ரத்தன் டாட்டா ஆப்பிள் என்பது மிகப் பெரிய நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு எனக்கு கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்கள் தேவைப்படும் என்றார். அதாவது பத்திரிக்கையாளர் ஒரு ஆப்பிள் போனை வாங்குவதற்கு எவ்வளவு நாளாகும் என‌ கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்களில் ரத்தன் டாட்டா மட்டும் ஆப்பிள் கம்பெனியை வாங்குவதற்கு எவ்வளவு நாளாகும் என கேட்டுள்ளார் என நினைத்துள்ளார்.

Categories

Tech |