Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் போன் பயனர்களே உஷார்…. உடனே இத பண்ணுங்க…. இந்திய அரசு அபாய எச்சரிக்கை….!!!!

ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிள் safari பிரவுசரில் 15.4. க்கு முந்தைய பதிப்பு வைத்திருக்கும் அனைவரும் உடனே அப்டேட் செய்ய வேண்டும். பழைய பதிப்பு ஹேக்கர்களின் பிடியில் எளிதில் சிக்கிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பழைய மென்பொருளை பயன்படுத்தும் ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு உயர் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அப்டேட் செய்யாமல் பழைய மென்பொருளை பயன்படுத்தும் போது சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளை ஹேக்கர்கள் நிறுவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியாவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைய பாதிப்பு அலுவலகம் ஆப்பிள் பயனர்களுக்கு அவர்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |