கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக வேறு ஒரு போனை வாங்கி தந்துள்ளார்.
அதனால், மனமுடைந்த ராகுல் வீட்டை விட்டு வெளியேறி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ராகுல் தந்தை பழனிசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.