ஆப்பிள் விதைகளில் சயனைடு என்ற கொடிய விஷம் இருப்பதாக கூறுகின்றனர். ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது விதைகளை அகற்றி விட்டு கவனமாக சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிட கொடுக்க கூடாது. அப்படியே நீங்கள் கொடுத்தாலும் விதைகளை அகற்றி விட்டு கொடுக்கலாம். பொதுவாக ஆப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது என்பதால் பெரும்பாலான நோயாளிகள் அதை சாப்பிடுகின்றனர். ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் விதைகள், உயிரையே கொள்ளுமளவுக்கு சயனைடு விஷம் உள்ளதாம்.
சராசரியாக ஒரு ஆப்பிளில் ஆறு விதைகள் இருக்குமாம். அதனை சாப்பிடும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆனால் அதுவே 150 முதல் 1000 விதைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அது உயிரைக் கொல்லும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது. விதைகளை முழுமையாக சாப்பிட்டால் அவ்வளவு பாதிப்பு அல்ல. அதனை அரைத்து பவுடர் ஆக சாப்பிட்டால் கொடிய விஷத்தன்மை கொண்டது. விதைகள் அப்படியே இருக்கும் போது எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது.
ஆனால் விதைகள் சேதமடையும் போது அதாவது நாம் அவற்றை மெல்லும் போது அவை சேர்க்கப்படும் போதும் விதைகளில் உள்ள அமிக்டாலின் ரசாயனம் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றம் அடையும். அப்போது அது அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறுகின்றது. அது அளவில் அதிகரிக்கும்போது ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். நாம் யாரும் அப்படி அதிக அளவு ஆப்பிள் விதைகளை சேகரித்து சாப்பிடுவதில்லை என்பதால் நாம் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.