விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது.. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாமும் நடைபெற்று வருகின்றது..
தொடர்ந்து 3 முறை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.. மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த மெகா முகாமில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.. அதேசமயம் தடுப்பூசி போடாமல் சிலர் இருக்கின்றனர்..
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். அதாவது, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை (குறுஞ்செய்தி) காண்பித்தால் தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்..
இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.