ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 ஆழாக்கு புழுங்கல் அரிசி – 2 ஆழாக்கு வெ. உளுத்தம்பருப்பு – முக்கால் ஆழாக்கு வெந்தயம் – 2 டீஸ்பூன் சர்க்கரை – ஒன்றரை ஆழாக்கு தேங்காய் – 1 உப்பு – தேவையான அளவு ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்கவும். ஊறிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். முதல் நாள் மாலையே மாவை தயார் செய்ய வேண்டும்.
மறுநாள் காலை, தேங்காயை துருவி பால் எடுத்து அதில் சர்க்கரையை கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து, ஒரு துணியினால் எண்ணெயை தடவி, ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றி சட்டியை இருபக்கம் பிடித்துக்கொண்டு சூட்டினால் மாவு ஓரங்களில் லேசாகவும் நடுவில் கனமாகவும் வந்ததும், மூடி வையுங்கள்.
ஓரிரு நிமிடங்கள் கழித்துத் திறந்து பார்த்தால் ஆப்பம் வெந்திருக்கும். பிறகு ஒரு தட்டில் ஆபத்தை வைத்து தேங்காய் பால் ஊற்றி சற்று நேரம் ஊறவைத்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பத்தை, தேங்காய் பால் இல்லாமல் கார சட்னி குருமா உடனும் சாப்பிடலாம்.