ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
கேரளா மாநிலத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குரங்கம்மை வைரஸ் காரணமாக திருச்சூரை சேர்ந்த ஒரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலும் மக்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இந்த காய்ச்சல் கண்ணூர் பகுதியில் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே 300 பன்றிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மேலும் 250 பன்றிகளை கொல்ல இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.