Categories
தேசிய செய்திகள்

“ஆப்ரேஷன் சக்ரா” நாடு முழுவதும் அதிரடி சோதனை…. தங்கம் மற்றும் வெள்ளிகளை கைப்பற்றிய சிபிஐ….!!!!

இந்தியாவில் உள்ள பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பண மோசடி என பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இணைய  வழியில் பண மோசடி அதிக அளவில்   நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்கள் தினம்தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் ஆபரேஷன் சக்ரா என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் இந்தியா முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் சர்வதேச போலிஸ் அமைப்பான இண்டர்போல்  மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான  எப்.பி. ஐ. நாட்டில் உள்ள ஏராளமான இடங்களில் பணம் மற்றும் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. அந்த தகவலின் படி இந்தியாவில் 105 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 1 1/2  கோடி ரூபாய் மற்றும் 1 1/2 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |