தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள் கட்சி மாறுவதற்கு பெரும் பணம் ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜிஸ் நகரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நேற்று மாலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பண்ணை வீட்டு ரகசிய பேரம் பற்றிய தகவல் போலீசருக்கு கிடைத்ததை அடுத்து 100 கோடி அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் எம்எல்ஏக்களை கட்சி மாற்ற முக்கிய நபருக்கு 100 கோடி ரூபாயும் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கு 50 கோடியும் தருவதாக கைதானவர்கள் ஆசை வார்த்தை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் போலி அடையாளங்கள் மூலமாக ஹைதராபாத்திற்கு வந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்திருக்கின்றனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அரியானாவின் பரிதாபத்தை சேர்ந்த சாமியார் ராம் சந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம்ஹயாஜி மற்றும் தொழிலதிபர் நந்தகுமார் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தந்தூர் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில் தான் இந்த குதிரை பேர முயற்சி நடைபெற்றுள்ளது. அதன் பின் சம்பந்தப்பட்ட 4 எம்எல்ஏக்களும் முதல் மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சிக்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் தெலுங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் டி ஆர் எஸ் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறுத்திருக்கின்ற பாஜக திறப்பு முழு கோர்ட் தொகுதி இடைத்தேர்தலில் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல் மந்திரி சந்திரசேகர் ராவும் அவரது கட்சியினரும் குதிரை பேர நாடகத்தை நடத்தி இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.