ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும்.
ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும்.
சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் சிவப்பு குணமாகும்.
அரிசி மாவு மஞ்சள் பொடி இவை இரண்டையும் விலக்கி எண்ணெய் விட்டு வேகவைத்து கட்டிகளின் மீது கட்டி வர பழுத்து உடையும்.
விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர தலைவலி, சளி ,முதலியன குணமாகும்.
ஆமணக்கு இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்.