பாகலூர் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற சிறுவர் சிறுமியர் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஓசூர் அருகே ஜீவமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வந்து தங்கி கூலித்தொழில் செய்து வந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் எட்டு பேர் இன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த ஆமணக்கு விதைகளை, விஷ விதை என்று தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியது. இதனால் பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக சிறுவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.