தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். லிவ்விங் டு கெதர் முறைப்படி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் உருவான” நெற்றிக்கண்” படம் ஓடிடியில் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை விளம்பர விளம்பரப்படுத்தல் தொடர்பான நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் குறித்து நயன்தாரா பேசிய காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள விளம்பரப்படுத்தல் நிகழ்ச்சிக்காகாண ப்ரோமோவில், கையில் நயன்தாரா அணிந்துள்ள மோதிரம் குறித்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி கேள்வி கேட்கும் போது, அதற்கு இந்த மோதிரம் தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரம் என்று நயன்தாரா பதில் அளித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவனிடம் தனக்கு அனைத்துமே பிடிக்கும் என்றும், பிடிக்காத விஷயங்கள் சில இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.