திமுக வளர்ந்ததே கல்லூரிகளில் தான் என்பதனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகளை திறப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது, ஒருவருக்கு கல்வி என்பது அவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும்.
கல்வியுடன் சேர்த்து சமூக அக்கறையையும் உடனடியாக அதனோடு புகட்ட வேண்டும். அதிமுக வளர்ந்ததே கல்லூரிகளில் தான். அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான கல்லூரிகளை உருவாக்கி வருகிறோம். இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். காமராஜர் காலத்தில் கல்லூரிகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. கருணாநிதி காலத்தில் அதிக அளவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று பேசியுள்ளார்.