ஸ்டாலின் ஆபத்தானவர் என எச்.ராஜா சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் ராஜா பேசினார்கள், ரகசியமாக பதிவு செய்து போட்டு விட்டோம் அப்படி என்று சில ஊடகங்கள் சொல்கிறார்.
ராஜா அண்ணா பல இடங்களில் இது போன்று சொல்லியிருக்காங்க. இது ராஜா அண்ணாவின் தனிப்பட்ட கருத்து. எதற்காக கருணாநிதி அவர்களை விட ஸ்டாலின் அவர்கள் ஆபத்தானவர் என்று ராஜா அண்ணன் சொல்கிற கருத்து புரிந்து கொள்கிறேன் என்றால்…. ஸ்டாலின் அவர்கள் சுயமாக இயங்கவில்லை என்று சொல்கிறார்.
அவரை வேற ஒரு லாபி, வேற ஒரு குரூப் ஆப்ரேட் செய்கிறது என்று சொல்ல வருகிறார், அது மிகவும் ஆபத்து. கருணாநிதி அவர்களை பொருத்தவரை சொந்தமாக மூளையை பயன்படுத்தி மனிதன் வேலை செய்கின்ற பொழுது எதிர்க்க முடியும். ஆனால் உங்களின் சார்பாக வேறு ஒருவர் குழு வெளியே அமர்ந்து கொண்டு….
நிறைய கும்பல் இப்போது தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. மத கலவரத்தை விதைக்க…. அந்த அடிப்படையில்தான் கூறி இருக்கிறார். அதனால் இதை தமிழகத்தில் இருக்கக்கூடிய சில கட்சி சார்ந்த ஊடகங்கள் பாஜக அஞ்சுகிறது. பாஜக யாரை பார்த்தும் அஞ்சவில்லை என அண்ணாமலை கூறினார்.