இயக்குனர் ஐஸ்வர்யா அண்மையில் பேட்டியொன்றில் அவரின் காதல் குறித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அண்மையில் நடந்த பேட்டியொன்றில் ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, “எது நடந்தாலும் சரி அதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். நமக்கென்று இருந்தால் அது நம்மை நிச்சயம் ஒருநாள் தேடி வரும். இதை நான் பழகிக் கொண்டிருக்கிறேன். இதற்கு தனிமையில் என்னை விட வேண்டும் காதல் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது பொருளை சார்ந்ததில்லை. காதலின் அர்த்தம் நாம் வளர வளர மாறுகின்றது.
என் அப்பாவை காதலிக்கிறேன், என் அம்மாவை காதலிக்கிறேன், என் குழந்தைகளை காதலிக்கிறேன். காதல் என்பது ஒருவரோடு முடிந்துவிடாது அது வயதிற்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே இருக்கும். ஆமாம் நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்காலிகமாக தனது கெரியரிலிருந்து ஓய்வெடுக்கும் ஐஸ்வர்யா தற்போது “முசாபீர்” என்னும் ஆல்பம் பாடலை இயக்குகிறார். மேலும் இப் பாடலை இவரே தயாரிக்கிறார். இப்பாடலில் ஐஸ்வர்யாவுடன் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகிறார். பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்பாடலின் டிரெய்லர் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் டிரைலரில் ஐஸ்வர்யா பெயரின் பின்னால் தனுஷ் பெயர் இல்லாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.