பிக்பாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இதுவரை 5 சீசன்களையும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் வனிதா தான் இனிமேலும் போட்டியில் இருக்க விரும்பவில்லை என சொல்லி பிக்பாஸ் டீமிடம் இருந்து வற்புறுத்தி வெளியில் வந்திருக்கிறார்.
இதனால் தனது மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். வெளியில் வந்து சில தினங்களுக்கு பிறகு அவர் நார்மல் ஆகி விட்டதாகவும் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தன்னை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில் “ஆமாம் நான் திமிர் பிடித்தவள்” தான் என அவர் கூறியிருந்தார். இந்த சூழலில் தற்போது தனது வழக்கமான வேலையை தொடங்கியிக்கிறார் பிரியாணி கடை விளம்பரத்தில் அவர் நடித்திருக்கிறார் அவருடன் விஜய் டிவி பாலாவும் உடன் இருக்கிறார்.