ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு அதை எப்படி பொதுமக்கள் தெரிந்து கொள்வது என்பது தொடர்பான தகவலை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுகின்றது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 3000 ரூபாய் கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இதனால் அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள எளிய வழி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூல் செய்யும் பட்சத்தில் அதை இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் ஆம்னி பஸ்களில் அவற்றின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருக்கை வசதி, படுக்கை வசதி, குளிச்சான வசதி என பேருந்துகளின் வசதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.