ஆமிர் கான் நடித்த விளம்பர சர்ச்சை தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆமிர் கான் பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில் ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்கு அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்ற வசனத்தை ஆமிர் கான் பேசியுள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த டயர் நிறுவனத்திற்கும், ஆமிர் கானுக்கும் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் ஆமிர் கான் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக பேசுகிறார் என மதரீதியாக விமர்சிக்கத் தொடங்கினர்.
Sad. The way communal divide is happening to gain attention or division .
We the people r silent
Spectators to hear these kind of nonsense .
These sick minds need treatment of love .— pcsreeramISC (@pcsreeram) October 23, 2021
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘வருத்தம். கவனத்தை ஈர்க்கவும், பிரிவை ஏற்படுத்தவும் சமூகப் பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. மக்களாகிய நாம் இது போன்ற முட்டாள்தனங்களை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த நோய்வாய்ப்பட்ட மனங்களுக்கு அன்பின் சிகிச்சை தேவை’ என பதிவிட்டுள்ளார்.