சிம்பன்சி குரங்கும், ஆமையும் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு விதமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. இதில் சில வீடியோக்கள் மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக இருக்கிறது.
இந்நிலையில் ஒரு சிம்பன்சியும், ஒரு ஆமையும் ஒன்றுக்கொன்று அன்பை பகிர்ந்து கொள்ளும் அற்புதமான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் சிம்பன்சி ஒரு ஆப்பிளை ஆமைக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிடுகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது மிகவும் பூரிப்பாக இருக்கிறது.