கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம் பெண் பக்கத்தில் தூங்கி இளைஞருக்கு தர்மா அடி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரும்பாலும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேர பயணத்திற்கு தற்போது படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பெரும்பாலானோர். தேர்வு செய்து அதில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் பெண் ஒருவர் தனது சொந்த ஊரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆம்னி பஸ் ஒன்றில் தனது இருக்கையில் தூங்கி வந்துள்ளார்.
தனியாக வந்த அந்த பெண் அருகே இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து சகப்பயணிகள் அவரை தாக்கினார்கள். அருகில் தூங்கியதற்காக சிலம்பரசன் மற்றும் பேருந்தின் டிரைவர் சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.