Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்… செம ஹேப்பி பொதுமக்கள்….!!!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதனை தடுப்பதற்காக அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டண கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. http: // www.aoboa.co.in எனும் இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் பேசும்போது ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. அதனால் ஒரு வழித்தடங்களில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது.

இந்தியா போன்ற நாடுகளில் போக்குவரத்து துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம் பேருந்து போன்றவற்றில் டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ளபோது குறைந்த அளவு கட்டணமும் தேவைகள் அதிகமாக உள்ளபோது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாக நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளை பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொள்வது அதனால் எந்த பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை. இருந்தபோதிலும் அரசுக்கு இந்த தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்பட்ட கூடாது எனும் நோக்கத்தில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் அனைத்து வழித்தடங்களும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்திருக்கிறோம் என கூறியுள்ளது.

Categories

Tech |