தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு 4500 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.