Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. 10 பேர் படுகாயம்…. மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு….!!!!

ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டத்திலிருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வில் ஈடுபட்டார். இதனை அடுத்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Categories

Tech |