Categories
தேசிய செய்திகள்

“ஆம்புலன்சில் ஏற்ற முடியாது” தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற மகன்…காண்போரை கலங்க வைக்கும் சம்பவம்…!!

ஆந்திராவில் உயிரிழந்த தாயை இருசக்கரத்தில் வைத்து கொண்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நலம் சரி இல்லாததால் அவரது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மஞ்சுளாவின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஓட்டுநர்கள் ஏற்ற மறுத்துள்ளனர். ஆகையால் வேறுவழியின்றி உயிரிழந்த தாயை மகனும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |