Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆம்புலன்ஸிற்காக காத்திருக்க வேண்டாம்…. கூடுதல் வாகனங்கள் இயக்கம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

பொதுமக்களின் நலனுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் இதுவரை 17 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக மேலும் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில், அந்த சேவையை எம்.பி. நவாஸ்கனி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைய முடியும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணியாளர்கள், இணை இயக்குனர் சகாயம் ஸ்டீபன்ராஜ் மற்றும் மருத்துவர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |