சேலத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வரும் இவர் வாடகைக்காக தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பெங்களூரில் இருந்து வாடகை எடுத்தது. ஒரே தகவல் மேலும் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் நிறுவனத்திற்கு தான் அளித்த 16,800 ரூபாயை ராஜா திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திரும்பி கொடுக்காததால் அதிருப்தி அடைந்த ராஜா மதுபோதையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.