Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து…… VIDEO… பதற வைக்கும் காட்சி…. 4 பேர் பலி….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஷிரூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் மரணம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் நேற்று மாலை சென்றது. உடுப்பி, பைந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆம்புலன்ஸ் வேகமாக வருவதை கண்ட ஊழியர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை திறக்க முயன்றனர். சாலையில் இருந்த தடுப்பை ஊழியர் ஒருவர் அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் மழைய நீரில் சறுக்கி பயங்கர விபத்துக்குள்ளானது.அந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Categories

Tech |