Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் வரல…! தவித்த கொரோனா நோயாளி… சரக்கு ஆட்டோவில் பயணம் ..!!

மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மூடுவார் பட்டியைச் சேர்ந்த பரணி முத்து என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Categories

Tech |