கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிவதில் தவறு நடந்துள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழகத்திலும் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சாவூரில் 20 கொரோனா சாம்பிள் எடுத்து இன்ஸ்டம் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளோம். அதனுடைய முடிவு இன்னும் வரவில்லை.
மத்திய அரசின் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் நம்மிடம் என்ன சொல்கிறார்கள் என்றால் ? எந்த ஒரு கொரானாவாக இருக்கட்டும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்மிடம் 11 கேஸ் வந்து uk கேஸ் வந்தது, ஒரு கேஸ் சவுத் ஆப்பிரிக்கா கேஸ் வந்தது. மற்றவை எல்லாம் உள்ளுக்குள் இருக்கின்ற கேஸ். இப்பொழுது மகராஷ்டிரா எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய கேஸ் தான் 57,000 வந்துள்ளது.
மற்றொன்று தொடர்பை கண்டறிவதில் கொஞ்சம் தவறு நடந்திருக்கிறது என்பது ஒரு பெரும்பாலான வல்லுனர்களின் கருத்து. அதனால்தான் தமிழ்நாட்டில் நாம் ஒருத்தர் கண்டுபிடித்தால், குறைந்தது 20 லிருந்து 30பேரோடு அவர் வைத்திருந்த தொடர்பை கண்டுபிடிக்க சொல்லிருக்கின்றோம். அவர்களை டெஸ்ட் எடுத்தால் பாசிட்டிவ் வரும், 5,000 என்பது 6,000 ஆகும்.
அதனால் தான் மத்திய அரசு அனைத்து மாநில அறிவுரை வழங்கும் போது கூட, எண்ணிக்கையை பார்த்து பயப்படவேண்டாம். முழுமையாக பரிசோதனை செய்யுங்கள் என சொல்லியுள்ளார்களார்கள். சிலர் சாம்பல் சரியாக எடுக்காமல் இருப்பார்கள். அதேபோல் அதிக எண்ணிக்கை வராமல் இருப்பதற்கு பரிசோதனையை செய்யாமல் இருக்க கூடாது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடந்தால் தான் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.