சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த பிரையன் என்பவர் தனது கைபேசியில் சிறுவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பலவற்றை வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க பிரையனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு ஆராய்ந்ததில் பல புகைப்படங்கள் அவரால் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறையனை கைது செய்தனர். அதோடு செல்போனில் இருந்த சிறுவர்-சிறுமிகள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பிரையன் குற்றவாளி என்பது உறுதியானது. இந்நிலையில் தற்போது அவருக்கான தண்டனை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிறையனுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி மார்க் கூறுகையில் “பிரையன் சிறுவர் சிறுமிகளுக்கு ஆபத்தை விளைவிப்பவராக இருந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கூட ஆமாம் நான் சிறுவர்-சிறுமிகளை வேட்டையாடுபவன் தான் என தைரியமாக ஒப்புக் கொண்டார். அது மட்டுமன்றி குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த சிலரை பற்றி கூறவும் அவர் தயாராக இருக்கிறார்” என கூறினார்.