தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசை சுங்க சட்டம் 108 படி கேரள உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்ட விரோத நாணய பரிவர்த்தனைகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்.
மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர், மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இதில் நேரடி தொடர்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதை சுங்க சட்டத்தின் அமைப்பு பிரமாண பத்திரமாக பதிவு செய்து கொண்டது. இந்த வாக்குமூலத்தால் சுங்கத்துறையினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேரள முதலமைச்சரை கடுமையாக கண்டித்துள்ளார்.
இனியும் இவர் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும், பாஜகவிற்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கும் ரகசிய பேச்சுவார்த்தை இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு அரபு பேச தெரியாததாலும் தூதரகத்தின் அலுவலர்களுக்கும் கேரள மொழி தெரியாததாலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பேச்சாளராகவே நான் இருந்தேன் என்று சுவப்னா சுரேஷ் கூறியுள்ளார்.