Categories
மாநில செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் ஆபத்து…. திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கவும்,இந்தியாவில் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருவதால் திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் இரண்டாவது பெரிய தொழிலான ஜவுளித் தொழிலில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் , வேலை இழப்பை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |