புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து பார்வையிட்டு வாங்கி சென்றனர்.
கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் மைதானமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த புத்தக கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள் மற்றும் அவர்களது தியாகத்தை பொது மக்கள் உணரும் வகையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் புத்தக கண்காட்சி வளாகத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி மத்திய மந்திரி வேல்முருகன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து புத்தக கண்காட்சி வளாகத்தில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பபாசி தலைவர் எஸ்.வயிரவன், துணைத்தலைவர் பெ.மயிலவேலன், எஸ்.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து வாசகர்கள் வாங்கும் அவரது படைப்புகளில் கையெழுத்திட்டு கொடுத்தார். இதனால் ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர். இவர் காத்திருந்த அனைத்து வாசகர்களின் புத்தகங்களிலும் கையெழுத்திட்டு கொடுத்தார். மேலும் புத்தக கண்காட்சிக்கு சென்று ஒவ்வொரு அரண்களாக பார்வையிட்டார்.