பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிட்டனில் 3வது பொது முடக்கம் கடைபிடிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என கூறியதாக என்ற The Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் The Daily Mail வழங்கவில்லை. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace விளக்கமளித்துள்ளார். மேலும் பிரதமர் கொரோனாவை ஒழிப்பதற்காக அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறார் என்றும் இது வேண்டுமென்ற செய்தது என்றும் கூறியுள்ளார்.