செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என செல்வராகவனிடம் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் செல்வராகவன் இது தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இரண்டு படங்களில் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இரு படமுமே வெவ்வேறு கதைகளை கொண்டவை. தனுஷ் முன்பே சொன்னது போல் ஏற்கனவே செய்ததை விட சிறந்த படைப்பை தர வேண்டும். இல்லையெனில் பேசாமல் இருக்க வேண்டும். தனுஷ், கார்த்தி இருவரும் முன்வந்தால் தான் இரண்டாம் பாகங்கள் குறித்து யோசிக்க முடியும்” என்று தெரிவித்தார்.