ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் பால்மோரல் அரண்மனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் அரண்மனையில் உள்ள மேடையில் ராஜ மரியாதையுடனும், கிரீடத்துடன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 6.30 மணி அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவடைகிறது. அதன்பின்னர் இறுதி சடங்குகள் நிகழ்வு தொடங்கி சுமார் ஒரு மணி வரை நீடித்தது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பின் லண்டனில் அரசு மரியாதையுடன் நடைபெறும் முக்கியமான இறுதிச் சடங்கு இதுவாகும். இந்நிலையில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. அப்போது லண்டன் மாநகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில் ராணியாரின் உடல் அடங்கிய சவப்பெட்டி லண்டன் மாநகரின் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வழியாக பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டப்பட்ட வண்டியில் எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயம் ஆகும். இங்கு பிரிட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் நடைபெறும். அரசர்களின் முடிச்சிட்டு விழா மற்றும் அடக்கம் செய்வதற்கான இடமாக இது உருவாக்கப்பட்டது. 1066 இல் இந்த மடாலயத்தில் முடி சுட்டப்பட்ட முதல் மன்னர் முதலாம் வில்லியம் ஆவார்.
38 ஆண்ட மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் இங்கு நடந்துள்ளது. மேலும் இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1947-ஆம் ஆண்டில் இந்த மடாலயத்தில் ராணி எலிசபெத் பிலிப் மவுண்ட்பேட்டனை திருமணம் செய்தார். இங்கு 30 மன்னர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 3,330 கல்லறைகள் உள்ளது. மேலும் ராணியின் கணவரான இளவரசர் பிலிப்புடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவர் விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தின் கீழ் உள்ள ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அதைப்போல் ராணி எலிசபெத்தில் உடலும் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.