பிரபல நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆர்வக்கோளாறில் தான் செய்த ஆயில் மசாஜால் கடுமையான வாந்தி, தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். ஆனால் இனி ஆயில் மசாஜ் செய்யவே மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.