Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆயிஷாவை அழ செய்த அசல் கோளாறு”…. பரபரப்பு ப்ரோமோ…. அப்ப செம என்டர்டெய்ன்மென்ட் தான்….!!!!!!

இன்று வெளியான ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் செம என்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கு என கூறினர்.

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோக்கள் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அசல், ஆயிஷாவை டாஸ்கில் அழ வைத்திருக்கின்றார்.

ஒன் டூ ஒன் பேசும்போது நீ என்னை டா போட்டு பேசுவது பிடிக்கவில்லை என முகத்தில் அடித்தது போல் கூறுகின்றார் அசல். இதனால் ஆயிஷா அப்செட்டாகி எனக்கு ஃப்ரெண்ட்லியாக தோன்றியதால் தான் அப்படி கூறினேன். இதையடுத்து இப்படி அசல் பேசுவதை எதிர்பார்க்காத ஆயிஷா தனியாக அமர்ந்து அழுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் மூன்று நாட்களில் மொத்தத்தையும் இறக்கி விட்டீர்களே எனக் கூறுகின்றார்கள். மேலும் ஆயிஷாவை அழ வைத்த அசல் கோளாறையும் நெட்டிஷன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள்.

Categories

Tech |