Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்கள்”…. ரோந்து பணியின் போது கைது செய்த போலீசார்….!!!!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள்.

மதுரை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் அதை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது பதுங்கி இருந்த கும்பல் ஒன்று போலீஸை கண்டதும் ஓட முயற்சி செய்தது.

இதனால் போலீசார் விரட்டிச் சென்று ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்தார்கள். அதில் அவர்கள் மேலவாசல் குடியிருப்பைச் சேர்ந்த ஜெபராஜ், பாலா, பேச்சிமுத்து, தீடிர் நகர் மகேந்திரன், ஹீராநகர் மணிகண்டன், பெருமாள் என்பது தெரிய வந்தது. பின் அவர்களை சோதனை செய்ததில் கத்தி, அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இதனால் போலீசார் ஐவரையும் கைது செய்தார்கள்.

Categories

Tech |