Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆயுதங்களுடன் நின்ற மர்மநபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… 6 பேர் கைது…!!

பயங்கர ஆயுதங்களுடன் கோவிலில் திருட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள வாணியவல்லம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆய்வு பணிக்காக நயினார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நயினார் கோவில் மருதவன காளியம்மன் கோவில் அருகே மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து பாலாஜி உடனடியாக நயினார் கோவில் காவல்நியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிலுக்கு அருகே பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மருதவன காளியம்மன் கோவிலுக்கு திருட வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 6 பேர்  மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |