Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றதா….? அமெரிக்கா கருத்து… வெளியான வீடியோ ஆதாரம்…!!!!!

நியோ-நாஜி போராளிகள் குழு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் நியோ-நாஜி போராளிகள் குழுவான அசோவ் படைப்பிரிவு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்ற  வீடியோ வெளியாகியிருக்கிறது.  முன்னதாக, உக்ரைனுக்கு தங்கள் நாடு அனுப்பிய ஆயுதங்கள் என்ன ஆனது என்பது பற்றி  எந்த தகவலுமில்லை  என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆயுதங்கள் தவறான நபர்களின் (போராளிகள்) கைகளுக்கு சென்றதாக அமெரிக்கா கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், நீண்ட நாட்களாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என கவலைகள் எழுந்திருக்கிறது. இதற்கிடையே, அசோவ் படைப்பிரிவு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ வெளியாகியிருக்கிறது.அசோவ் படைப்பிரிவு, தீவிர வலதுசாரி தொடர்புகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் உருவாக்கிய இந்த ஆயுதங்கள் இப்போது அசோவ் படைப்பிரிவு கைகளில் இருப்பதை சமீபத்தில் வெளியான வீடியோ காட்டுகிறது என ஜெருசலம் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும் குழுவில் இன்னும் முக்கிய நியோ-நாஜிக்கள் இருக்கின்றனர் மற்றும் வெள்ளை மேலாதிக்கக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், அசோவ் படைப்பிரிவு சீர்திருத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து  சிஎன்என் மற்றும் பிற ஊடக பகுப்பாய்வு செய்து வருகின்றது.

Categories

Tech |