ஈரான் அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பைடன் பதவி ஏற்ற பிறகும் அந்நாட்டிற்கும் ஈரானிற்குமிடையேயான பிரச்சனை இன்றளவும் தீரவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் கப்பற்படைக்குரிய விமானம் தாங்கும் கப்பல், ஹெலிகாப்டர்கள், ராணுவ சாதனங்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை பாரசீக வளைகுடாவில் சுற்றித் திரிந்துள்ளது.
இதனை ஈரான் ட்ரோன் மூலம் பதிவு செய்து வெளியிட்டது. இதனால் இருநாடுகளுக்குமிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டினுடைய ஐ.ஆர்.ஜி.சியின் தளபதி பிராந்தியத்திலிருக்கும் அமெரிக்க ராணுவத்தினருக்கு பாத்தியப்பட்ட அனைத்தையும் தங்களுடைய படை தாக்கி அழிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
Iran's IRGC drone takes precise footage as it flies over US aircraft carrier in the Persian Gulf pic.twitter.com/q0xEfoty7v
— Press TV 🔻 (@PressTV) April 21, 2021